கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே மான்போல் குதித்துக்கொண் டோ டேல் அமுத மதிவிளங்கும் வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந் தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே