கான்றசோ றருந்தும் கணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்தையே விரும்பும் நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன் சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே