பாடல் எண் :594
காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
ஏமக் கொடுங்கற் றெனும்கரம் யாது செயுமோ என்செய்கேன்
நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே
பாடல் எண் :5025
காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன் எனக்கும் உனக்கும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.