பாடல் எண் :3201
காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
அதிசய மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.