காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல் நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே