காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம் நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய் சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்