காமாந்த காரியாய் மாதர் அல்குல் கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற நாயகமா மணியேநல் நலமே உன்றன் பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும் பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன் ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே