காயமாம் கானலைக் கருதி நாள்தொறும் மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே நேயமாம் சண்முக என்று நீறிடில் தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே