காயம் என்பதா காயம்என் றறியேன் கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன் சேய நன்னெறி அணித்தெனக் காட்டும் தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன் தூய நின்அடி யவருடன் கூடித் தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன் தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே