காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன் பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகையங் குகனே ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும் ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே