காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் னிவிலாள் காமமா திகளாம் பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் பயம்புரி வித்தனள் பலகால் தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத் திருமதி எனநினைந் தறியாள் சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத் தந்தது சாலும்எந் தாயே