காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே தனிநட ராசஎன் சற்குரு மணியே