காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த கற்பகத் தனிப்பெருந் தருவே தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த சோதியே தூய்மைஇல் லவர்க்குச் சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான சித்தியே சுத்தசன் மார்க்க வாய்மையே என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே