காரணம் இதுபுரி காரியம் இதுமேல் காரண காரியக் கருவிது பலவாய் ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே பூரண நிலைஅனு பவமுறில் கணமாம் பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே தாரணி தனில்என்ற தயவுடை அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே