காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல் நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான் பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே