காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல் இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப் பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப் பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா