காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார் நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே