காருர் சடையார் கனலார் மழுவார் கலவார் புரமுன் றெரிசெய்தார் ஆருர் உடையார் பலிதேர்ந் திடும்எம் அரனார் அருமைத் திருமகனார் போருர் உறைவார் தணிகா சலனார் புதியார் எனஎன் முனம்வந்தார் ஏருர் எமதுஎ ரினில்வா என்றார் எளியேன் ஏமாந் திருந்தேனே