கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன் ஏர்பூத்த ஒண்பளி தம் காண் கிலன்அதற் கென்செய்வனே