காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஸோதி இறைவனைச்சார் வீரே