காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர் தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும் சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே