காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார் காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால் வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால் விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார் தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும் துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான் வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி