காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார் ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால் சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே
காலங் கடந்த கடவுளைக் காணற்குக் காலங் கருதுவ தேன் - நெஞ்சே காலங் கருதுவ தேன்