காலம் செல்கின்ற தறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலைகாண் நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர் ஏலம் செல்கின்ற சூழலிஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள் நல்கு வார்அவை நல்குவன் உனக்கே