காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன் பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ