காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே
காவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார் ஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார் பூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி தாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே