காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும் தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால் சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப் பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே