காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகன் ஏவினும் காலனே வரினும் பூவின் மன்னவன் சீறினும் திருமால் போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய் ஒன்றும் அஞ்சல்நீ உளவறித் திலையோ நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே