கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற் கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே காணாமற் காண்கின்ற காட்சியே உள் அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே