கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர் அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர் அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய் தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே