கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே நிலைமண்டில ஆசிரியப்பா