கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண் நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில் ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன் பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்