கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல் தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய் வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய் ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே