குடிகொள் மலஞ்சூழ் நலவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப் பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக் கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே