குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக் கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித் தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும் தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே