குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப் பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும் எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்