குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண் கோதையர் பால்விரைந் தோடிச் சென்றஇப் பூலையேன் மனத்தினை மீட்டுன் திருவடிக் காக்கும்நாள் உளதோ என்தனி உயிரே என்னுடைப் பொருளே என்உளத் திணிதெழும் இன்பே மன்றலம் பொழில்குழி தணிகையம் பொருப்பில் வந்தமர்ந் தருள்செயூம் மணியே