குன்றாத குணக்குன்றே கோவாத மணியே குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன் ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே