குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன் இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே