குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம் சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும் ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே