குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோ வென்றே னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன் வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ