குற்ற மேபல இயற்றினும் எனைநீர் கொடியன் என்பது குறிப்பல உமது பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப் பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண் உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால் உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண் நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே
குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா