குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்றென தலவே தெற்றென அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ உற்றிடின் - முதற்பதிப்பு; பொ சு, ச மு க பதிப்பு தெற்றென - விரைந்து முதற்பதிப்பு