குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன் நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன் நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே