குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார் நிற்கநான் உவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம் பலத்திலே நின்றாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே