குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள் அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல் அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும் விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே