குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த கோடிகோ டிகளும்ஆங் காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் நிகழ்ந்தபற் பலபொருள் திரளும் விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும் மெய்அறி வானந்தம் விளங்க அலகுறா தொழியா ததுஅதில் விளங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே