குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணமென் றேஅதைக் கொண்டருள் பரூலதஇரிவோர் உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர் ஒற்றி யூரிடம் பற்றிய பரூலதஇனிதர் களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர் கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம் வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம் வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே