குழகனை அழியாக் குமரனை அட்ட குணத்தனைக் குறித்திடல் அறிதாம் அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ றாடல்வாழ் அண்ணலைத் தேவர் கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர் காலனை வேலனை மனதில் சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென் தணிகையில் கண்டிறைஞ் சுவனே