குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால் விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம் தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே